தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு: சாலைகள் வெறிசோடியது

சாத்தான்குளம் போலீசார் தாக்கி தந்தை ,மகன் உயிரிழந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் வெறிசோடி காணப்படும் சாலைகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரை காவல்துறையினர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் மெஞ்ஞானபுரம் நாசரேத் குரும்பூர் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் இரண்டாவது நாளாக அடைக்கப்பட்டுள்ளது இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் சாத்தான்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அதைப்போல் தூத்துக்குடியில் நகரின் முக்கிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி வெறிசோடி காணப்படுகிறது.