1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் – மாண்புமிகு முதல்வர் செய்தி அறிக்கை…

தமிழ்நாடு அரசு கொரானா வைரஸ் நோய் தொற்று தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நேற்று(24.03.20) மாலை 6 மணி முதல் குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (25.03.20) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் திரு.K.சண்முகம் இ.ஆ.ப. அவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் திரு.திரிபாத இ.கா.ப அவர்களும், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு ஏ.கே.விஸ்வநாதன் இ.கா.ப , அவர்களும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  1. 24.03.20 அன்று தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் சில மாணவர்கள் கொரானா நோய்தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வு எழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவுடன் பரிசீலித்து 24.03.20 அன்று +2 தேர்வு எழுத முடியாது அவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்.
  2. மேலும் கொரானா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 1ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்.
  3. தேநீர் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.