ரேஷன் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும் : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்திரவை மார்ச் 24 முதல் ஏப் 14 வரை பிறப்பித்துள்ளது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19 வகையான மளிகை பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 
தினக்கூலி வேலையிழப்பு மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஏதுமின்றி அரசு சார்பில் அறிவித்துள்ள ரூ 500 க்கான மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் அனைத்து நியாய விலை குடும்ப அட்டைகளுக்கும் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் (கையுறை, கிருமி நாசினி, முககவசம், சோப் உள்ளிட்ட இதர பொருட்கள்) வழங்கிட முன் வர வேண்டுமாறு தமிழக அரசிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சார்பாக கேட்டுக்கொள் தெரிவிக்கப்பட்டுள்ளது.