அனைத்து வங்கி கிளைகளும் செயல்படும் – மத்திய அரசு

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பட்டதையொட்டி பல்வேறு தொழிற்சாலைகள், கடைகள் திறக்க தளர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதித்த கட்டுபாட்டு பகுதிக்குள் உள்ள வங்கி கிளைகள் தவிர மற்ற வங்கிகள் வழக்கமான நேரத்தில், அதாவது காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனைத்து வங்கி கிளைகளும், 50 சதவிகித ஊழியர்கள் கொண்டு சுழற்சி முறையில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் செயல்படுவார்கள். வங்கியில் நடைபெறும் அனைத்து வழக்கமான சேவைகளும் இன்று முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.