முரட்டு மீசையில் அசத்தும் அஜித் – வலிமை

நடிகர் அஜித் போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் போலீசாக அஜித் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நடிகை ஷாலினி அஜித் தனது 40 வது பிறந்தாளை கொண்டாடிய பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்தின் இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. கூலிங் கிளாஸ், வித்யாசமான மீசை என அஜித் காட்சியளித்திருந்த அந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.