தேசிய பசுமைப்படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி : தூத்துக்குடி

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற செயல்பாடுகளை மத்திய அரசு தூய்மை செயல் திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையும் சேர்ந்து 26.2.2020 புதன்கிழமை 500 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் முனைவர் எம்.ஜெயந்தி அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி A.ஞானகௌரி அவர்களின் ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி நகர பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள் 500 பேர் பங்கேற்ற பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி A.ஞானகௌரி அவர்களின் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கல்வி மாவட்ட அதிகாரி திருமதி E.வசந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

மாணவ மாணவிகள் பங்கு கொண்ட பேரணி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி பாளையம்கோட்டை ரோடு வழியாக குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று பால விநாயகர் கோவில் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மாணவ மாணவிகள் காற்று மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வு கொண்ட பாதைகளை ஏந்தி சென்றனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் விநோயகம் செய்தனர்.

மாணவ-மாணவிகள் பேரணியின்போது காற்று மாசுபடுதலினால் ஏற்படும் தீமைகள் நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் கேடுகளை பற்றி முழக்கங்களை கூறியவாறு சென்றனர். பேரணிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ்.வெள்ளைச்சாமி தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர், திரு S. பென்சர் மற்றும் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர், திரு. ஜே. அருள் சகாயம் செய்து இருந்தனர்.