எய்ட்ஸ் தடுப்பு,கட்டுப்பாட்டு அலகில் வேலை வாய்ப்பு : தூத்துக்குடி

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி திட்டத்தில் தற்காலிகமாக பணியாற்ற நேர்முகத்தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதிகள் :

பணி : திட்ட மேலாளர்- 1, பணியிடம் கோவில்பட்டி. கல்வித்தகுதி : எம்ஏ., முதுநிலை சமூகப்பணி சமூகவியல்/உளவியல்/எம்எஸ்டபிள்யூ., மூன்று வருட முன்அனுபவம் தேவை. மாத ஊதியம் ரூ 15,000.

ஆற்றுப்படுத்துனர்‍- 2. பணியிடம் தூத்துக்குடி/கோவில்பட்டி. 
கல்வித்தகுதி : முதுநிலை சமூகப்பணி இரண்டு வருட முன் அனுபவம். மாத ஊதியம் ரூ. 12,000.

விருப்பம் உள்ள நபர்கள் சுயவிபரம் தகுந்த கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் முன் அனுபவ சான்றிதழ்களுடன் நேரில் வரும் மார்ச் 16 ம் தேதி அன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2329322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.