திருவள்ளுவர்

திருவள்ளுவர் சிலையை பராமரிக்க கூடாதென்று அதிமுக முடிவெடுத்துள்ளது – கனிமொழி குற்றச்சாட்டு

தமிழகத்தின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணித்தலைவியுமான  கனிமொழி எம்பி அளித்த பேட்டியில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் வலுவாக எதிர்த்து அனைத்து தமிழக எதிர்க்கட்சிகளும் இத்திட்டதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அரசாங்கம் சுற்றுச் சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. விவசாயிகளை, விவசாயத்தை முற்றிலுமாக தமிழ்நாட்டில் அழித்துவிடக் கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கிறோம்.

தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்க கூடாது என்பதையே வழக்கமாக்கியுள்ளனர். திருவள்ளுவர் சிலையை பராமரிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டன கூட்டம் நடத்தியும் எடுத்துக் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

இந்த ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கக் கூடிய அக்கறையை தமிழர்களுக்கு மிக முக்கியமாக இருக்க கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார்மயம் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யக்கூடிய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் ரெயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை நாம் சந்திக்கக்கூடும் என தெரிவித்தார்

-seithikkural