பள்ளியை தத்தெடுத்த முன்னால் மாணவர்கள் – அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி கடந்த 1961-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில், தற்போது வள்ளாலபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகளில், சில வகுப்பறைகள் தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்க்கு மிகவும் சேதமடைந்திருந்ததை அறிந்த முன்னாள் மாணவர்களான 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள் பள்ளியை தத்தெடுத்து மேம்படுத்த முடிவெடுத்து, அதற்காக முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டிடங்களைச் சீரமைத்தனர். இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிந்து புதுப்பிக்கட்ட கட்டிடங்களை ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த சீரமைப்பு .நிகழ்ச்சியினை அப்பபள்ளியின் தலைமைஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும், முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர்.அல்லாரைசல் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் கண்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் வாசிமலை, கல்விக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.