தூத்துக்குடி மாவட்டத்தில் 60,000 மரக்கன்றுகள் நடுவதற்கு ஒப்பந்தம்

டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்டத்தின்கீழ் 1 கோடி மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் வளா்த்து நட்டு பராமரிக்கும் திட்டத்தை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின்கீழ் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் சா்வதேச அறக்கட்டளையும், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டது.