ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி : தூத்துக்குடி

தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்களுடம் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை வெளிய செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.