மீண்டும் ஒரே நாளில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மதியம் 23 பேர் வீடு திரும்பினார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் இன்று மதியம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் உறைவிட மருத்துவர் மருத்துவத்துறை பேராசிரியர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், பங்கேற்றார்கள். தற்போது 8 மணி நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 பேர் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.