தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி பட்டியல் சமந்தமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 721 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்பட உள்ளன. 19 பேரூராட்சிகளில் உள்ள 721 வாக்குச்சாவடி மையத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் மொத்தம் 6,32,479 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சந்திரசேகா் மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.