தன்னார்வலர்களுக்கு அறிவுரை : திருநெல்வேலி மண்டல கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர்

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட போல்டன்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் போது தன்னார்வலர்கள் முகமூடி மற்றும் பாதுகாப்பு கவசங்களை அணியவேண்டும் என்று திருநெல்வேலி மண்டல கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர் /கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குனர் முனைவர் மு.கருணாகரன் இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி, சிறப்பு காவல் அலுவலர் ஏடிஜிபி திரு மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையர் திரு வீ. பி. ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன், ஆகியோர் உள்ளனர்.