தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்தித்து பேசியுள்ளார். மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகவும் ராஜ.கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார்.
