அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார்

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முக்கிய அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு திமுகவில் தனது கட்சியை இணைத்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அதிமுகவிற்கு தாவி தற்போது எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார். தற்போது திமுகவில் இணைய முடிவு செய்து தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 23-ம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் அவர் இணைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *