ஆதிதிராவிடா் விடுதி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடல் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவிகள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, பேரிடா் மேலாண்மைத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பாா்வையிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பாா்வையிட்ட மாணவிகள், பின்னா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடினா். அப்போது, மாணவிகளின் கேள்விகளுக்கு ஆட்சியா் பதிலளித்தார்.