கொரோனா தொற்று நோய் பரிசோதனை ஆய்வகத்தில் கூடுதல் பரிசோதனை இயந்திரம்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு, 18 ஏப்ரல் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை இங்கு 25000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவ்வாய்வகத்திற்கு ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி ஆர்.என். ஏ பிரித்தெடுப்பான் கருவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் RT PCR பரிசோதனை யின் முதல் கட்டமாக Throat swab மற்றும் Nasal swab ல் உள்ள RNA மரபணுக்கள் பிரித்தெடுக்கும் வேலையில், மனித தலையீட்டை குறைத்து, தானியங்கி முறையில் மிக துரிதமாக செய்து முடிக்கிறது. இதன் மூலம் RT PCR பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் பரிசோதனைகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். வழக்கமாக நாள் ஒன்றுக்கு 500 பரிசோதனைகள் செய்து வந்த நிலையில் இந்த தானியங்கி கருவியின் மூலம் அதிகமாக 800 பரிசோதனைகள் வரை செய்து கொள்ள முடியும்.

இக்கருவியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு வழங்கிய தமிழக அரசுக்கும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு. விஜயபாஸ்கர் அவர்களுக்கும் இதனை பரிந்துரை செய்து பெற்று தந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மருத்துவ கல்லூரியின் சார்பாக நன்றி தெரிவித்து உள்ளார்கள்.