கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா மீது பெண் குழந்தைகளை கடத்துதல், சிறுபிள்ளைகளை அனுப்பி மடத்திற்கு நிதி திரட்டுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனையின் வரத் தொடங்கின. இதனால் எப்படியாவது இவரை கைது செய்தாக வேண்டும் என குஜராத் போலீசார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த் அவர் பதிவிட்டில் ‘ஒரு பிராடு, ஜோக்கர் இடம் நாட்டின் தலைவர் தலைகுனிந்து ஆசிர்வாதம் பெற்றது நாட்டையை தலைகுனிய செய்ததாகவும் பெரும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்’. இவருடைய கருத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
