பறவைக்காய்ச்சல், கொரானா என வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் துரைசாமிபுரம், காட்டாலம்குளம் பகுதிகளில் அரசு கால்நடை கிளை மருத்துவமனைகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது, நீலகிரியில் 8, கோவை மாவட்டத்தில் 12 இடங்கள், தென்காசி, கன்னியாகுமரி என மொத்தம் 26 இடங்களில் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பறவைக்காய்ச்சல், கொரானா என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை தமிழக அரசிடம் உள்ளது. எவ்வித அச்சமும் தேவையில்லை. பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், பறவைக் காய்ச்சல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.