விவசாயிகள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்!!!

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதி விவசாயிகள் கூட்டம், விவசாய சங்க தலைவர் அழகுராஜா ஜெபராஜ் தலைமையில் அத்திமரப்பட்டி விவசாய சங்க கட்டிடத்தில் நடந்தது.

கூட்டத்தில் உப்பாற்று ஓடையின் கரைகளை பலப்படுத்தும் விதமாக கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். அதற்கு முன்பு உப்பாற்று ஓடையில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மற்றும் கரைகள் சீரமைப்பு பணிகளை கண்காணித்து ஆலோசனை வழங்கும் விதத்தில் 6 விவசாயிகள் தலைமையிலான கண்காணிப்பு குழுக்களை அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயலாளர் சேகர், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சமூக ஆர்வலர் ஜோதிமணி, வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் பொன் தனகரன், விவசாயிகள் திருமால், நம்மாழ்வார், விஜயகுமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.