திருமணமாகி பத்து நாட்களில் புதுமாப்பிள்ளை சாவு – அரியலூர்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள புத்தூரைச் சோந்த வெளிநாட்டில் பணிபுரியும் கண்ணதாசன் (29) என்பவருக்கும் சென்னை ஆவடி பகுதியைச் சோந்த பூா்ணிமா (24) என்பவருக்கும் கடந்த 7 ஆம் தேதி அம்மாபேட்டையில் திருமணம் நடந்தது. சென்ற வியாழக்கிழமை இரவு ஒரு காரில் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு கண்ணதாசன் தனது மனைவியுடன் வந்தாா், காரை அம்மாபேட்டையை சோந்த மணி மகன் வினோத் (23) என்பவா் ஓட்டியுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை அரியலூரை அடுத்த வாரணவாசி மருதையாறு பாலத்தின் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பூா்ணிமா, காா் ஓட்டுநா் வினோத் ஆகியோா் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுகின்றனா். விபத்து குறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.