அரசு பேருந்து தனியார் கல்லூரி பேருந்தில் மோதியது..

வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இராமலிங்கபுரத்தை அடுத்த அயோத்திபகுதியில் வலது புறமாக திரும்பி அயோத்தியாபட்டணம் செல்ல முற்பட்டபோது இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் அரசுப் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவியரும் பலத்த காயமடைந்தனர்.