மின் இணைப்புக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மின்துறை ஒரு அத்தியாவசியமான சேவைத் துறை என்பதை பொருட்படுத்தாமல் மின்வாரியத்தின் வருவாயை மட்டும் கணக்கில் கொண்டு மின் இணைப்புக் கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்வைத்துள்ள ஆலோசனை சரியல்லை என்றும், உத்தேசித்துள்ள மின் இணைப்புக் கட்டண உயர்வு என்பது இப்போதுள்ள கட்டணத்தைவிட 5 மடங்கு முதல் 8 மடங்கு வரை அதிகம். இது, ஏற்கெனவே பல காரணங்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு , பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால் மின்இணைப்புக் கட்டண உயர்வை முழுவதுமாக கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.