மின் கம்பம் ஏறி பழுதுபார்க்கும் பணியில் தேர்ச்சி பெற்ற பெண்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் மின்கம்பம் ஏறி பழுது பார்த்தல் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கான உடற்தகுதித் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற ஜோதி, சாதாரணமாக மின்கம்பம் ஏறி, மின் பழுதுபார்க்கும் வேலையை செய்துகாட்டி உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்தம் 1,170 பேர் உடல் தகுதி சோதனையில் 337 பேர் தேர்வாகியுள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கு வந்த 61 பெண்களில் இவர் ஒருவர் மட்டுமே உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்றுள்ளார். இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.