பெங்களூருக்கருகே கேதனயக்கனஹள்ளி என்ற பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க தர்மேந்திரா என்பவர் நிறைய மனைவிகள் மற்றும் அங்கங்கே வைப்பாட்டிகள் வைத்துக்கொண்டு குஜாலாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய இந்த உல்லாச வாழக்கை அவருடைய இரண்டாவது மனைவி ஷில்பாவுக்கும் ,அவருடைய செட்டப்புகளில் ஒருவரான அஞ்சினப்பா ஆகிய இருவருக்கும் பிடிக்கவில்லை. அதனால் கண்டராஜு மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் துணைக்கு சேர்த்துக்கொண்டு ரவுடி தர்மேந்திரா காருக்குள் தூங்கியபோது, அவருடைய இரண்டாவது மனைவி ஷில்பாவும், அவரது வைப்பாட்டி அஞ்சினப்ப என்ற பெண்ணும் மேலும் இருவர் சேர்ந்து கொண்டு அவரை தீவைத்து கொளுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியது.
