தமிழ்நாடு நடசாரி சிலம்பக் கழகம் சார்பில் 23-2- 2020 அன்று நாகர்கோயில் எம்.இ.டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான நட சாரி சிலம்பப் போட்டி மற்றும் மிஸ் &மிஸ்டர் 2020 (ட்ராக் இவன்ட்ஸ்) நடைப்பெற்றது . தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் வீரர்கள் , வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காவல்துறை டிஎஸ்பி திரு. ஐஸ் டின் ராஜ் , அன்னை வேளாங்கன்ணி கல்வி குழுமம் செயலர் டாக்டர் தேவ் ஆனந்த், மாவட்ட கல்வி அதிகாரி திரு டேவிட் டேனியல் , விளையாட்டுக்கழக பொதுச் செயலாளர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.

மிஸ் & மிஸ்டர் நடசாரி கேடயமும், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், விளையாட்டு கழக தலைவர் டாக்டர்.அர்னால்டு அரசு வழங்கினார்கள்.

கல்லூரி தலைவர் திரு. முகமது ஹக்கீம் , துணை தலைவர் சமீம் மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் .