ஆதார் இல்லாதோருக்கு இனி தனி ரேஷன் கார்டு!!!

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். மத்திய அரசின், ஆதார் எண் விபரங்கள் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பிறக்கும் போது, கைகள் செயல்படாதவர்கள், விபத்துக்களால், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார் இல்லாததால், அவர்களுக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடிவதில்லை. இதனால், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அவர்களுக்கு சிரமம். இதனை கருத்தில் கொண்டு ஆதார் கார்டு எடுக்க முடியாத அளவுக்கு, உடல் நலம் குன்றியவர்களுக்கு, ஆதார் இல்லாமல், ஸ்மார்ட் கார்டுக்கு மாற்றாக காகித வடிவில் தனி ரேஷன் கார்டுகளை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.