தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடி திருத்தும் அழகுக்கலை தொழிலாளர் நலச்சங்க தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு அளித்து கடைகளை மூடினோம். இந்த நிலையில் அரசு வழங்கிய ரூ.1,000 நிவாரணத்தொகை உதவியாக இருந்தது. தற்போது மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எனவே முடிதிருத்தும் தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் வரை கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடுத்து இருந்தனர்.