தூத்துக்குடி : பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு பன்மடங்கு உயர்த்தி தற்போது 950 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கேஸ் விலைகளை ஏற்றி வரும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி உள்ள சிதம்பர நகர் பேருந்து நிலையத்தில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டர் வாங்க சாதாரண மக்களுக்கு வழி இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், தடுப்புகளை வைத்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்
பேட்டி முரளிதரன் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்