உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல் – மாப்பிள்ளையூரணி

இராஜபாளையம் அருகில் உள்ள உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல்

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட இராஜபாளையம் கிராமத்தின் கடற்கரைக்கு செல்லும் பாதையில் உப்பளங்கள் அதிகமாக இருக்கின்றது அதன் அருகில் பள்ளங்கள் அதிமாக இருப்பதால் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நிா்வாகம், குப்பைகளை அங்கு தட்டி வந்தனா். அதற்கு இராஜபாளையம் இளைஞா்களும், பொதுமக்களும் எதிா்ப்பு தொிவித்தனா். அவா்களிடம் பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் அவா்கள் விரைவில் மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு வேறு இடம் கொடுத்தவுடன், நாங்கள் இங்கு குப்பைகளை கொட்டுவதில்லை என பத்து நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தாா், இதற்கிடையில் நேற்று (16/06/2021) காலை 9 மணிக்கு இராஜபாளையம் கடற்கரை பகுதியில் உள்ள உப்பள உாிமையாளா்கள், மீனவர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் ஆகியோர் முன்னாள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் மிக்கேல் தா்மமணி தலைமையில் குப்பை வண்டிகளை குப்பை கொட்ட விடாமல் மறியல் செய்து வண்டிகளை திருப்பி அனுப்பினாா்கள்.

இதுகுறித்து அப்பகுதி உப்பள உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில் :

மாப்பிளையூரணி பகுதிக்கு அருகில் கடற்கரைக்கு செல்லும் வழியில் சில பள்ளமான பகுதிகளில் தற்போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதன்பின் கொட்டப்பட்ட குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும் போது வரும் புகையானது அடிக்கும் காற்றால் பல்வேறு திசைகளுக்கும் பறக்கிறது.

இதனால் காற்றில் கலந்த புகை மற்றும் கழிவு தூசிகளானது அருகாமையில் உள்ள உணவு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் உப்பு தயாரிப்பு பகுதிகளில் சென்று அங்குள்ள உப்புக்கள் மீது படிகிறது. அத்தகைய உப்பை உண்ணும் போது ஏதேனும் வியாதிகள் கூட வர வாய்ப்புள்ளது.

மேலும் இந்த மாசு புகையால் அருகாமையில் உள்ள கடற்கரை தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படாமலும், அதற்குத் தீ வைக்காமலும் இருக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தனர்.