போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவி, அரசு வேலை வழங்க கோரி நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பினிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி கடுமையாக தாக்கி இருவரையும் படுகொலை செய்த உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் உடனே பணி நீக்கம் செய்வதோடு அதை கொலை வழக்காக பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் மீது பொதுமக்கள் மீதும் காவல்துறையினர் இதுபோன்ற அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதால் அவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கி தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது துரிதமாக தடுக்கப்பட வேண்டும் பணியில் அலட்சியத்தோடு நடந்து இந்த உயிர் பலிக்கு காரணமாக இருந்த நீதித்துறை நடுவர், மருத்துவர், சிறைத்துறை அதிகாரி உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீதும் தேவையான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மண்டல இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.