ஆறுமுகநேரி பேரூராட்சி பள்ளிவாசல் பஜாரில் கழிப்பறை அமைக்க நடவடிக்கை கோரி மனு : தொண்டன் சுப்பிரமணி

தூத்துக்குடி மாவட்டம் : தொண்டன் சுப்பிரமணி இவர் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரிடம் ஆறுமுகநேரி பேரூராட்சி பள்ளிவாசல் பஜாரில் கழிப்பறை அமைக்க நடவடிக்கை கோரி மனு ஒன்று அளித்தார். அவர் கொடுத்த மனுவில் ஆறுமுகநேரி பேரூராட்சி எல்லையில் பள்ளிவாசல் பஜாரில் ஜெய் காம்ப்ளக்ஸ் கட்டிடம் அருகில் அடைக்கலாபுரம் ரோடு பக்கம் ஆறுமுகநேரி ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகில் செயல்பட்டு வந்த பொது கழிப்பறை காணவில்லை. பொதுமக்களுக்கு கழிப்பறை மீண்டும் செயல்பட, அதுவும் குறிப்பாக பேருந்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு உதவியாக மீண்டும் செயல்பட தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.