தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் ஷேர் ஆட்டோ வேண்டும் : தூத்துக்குடி

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மதிமுக மாநில மீனவர் அணிச் செயலாளர் நக்கீரன் மனு ஒன்றை அனுப்பினார்.

அந்த மனுவில் : தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் தற்பொழுது எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.  தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல மக்கள் ஷேர் ஆட்டோவில் வர வேண்டுமெனில் பாளை ரோட்டில் உள்ள மஹாராஜா சில்க்ஸ் முன்பு வரை வந்து ஏறவும், இறங்கவும் நிலை உள்ளது. இதனால் முதியவர்கள் உட்பட பெண்களும், கல்லூரி மாணவிகளும் 400 மீட்டர் தூரம் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றன.  எனவே தற்காலிக பேருந்து நிலையம் அதிக பரப்பளவு கொண்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்குள் தென்புறம் வந்து செல்ல தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களும் முதியவர்களும், பெண்களும் கல்லூரி மாணவிகளும் சிரமமின்றி ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க இயலும். என மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அம்மனு மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதன் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய பயணிகளின் நலன் காத்திட வண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.