இலவசமாக ஆவின் பால் வழங்க வேண்டுமென கோரிக்கை : தூ.டி எம்பவர் அமைப்பு

குழந்தைகளுக்கு இலவசமாக ஆவின் பால் வழங்க வேண்டுமென தூத்துக்குடி எம்பவர் அமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு விடுத்துள்ளது.

மனுவில் ஊரடங்கு காரணமாக திருப்பூரில் பனியன் நிறுவனம் செயல்படாததால் தனது கணவருக்கு வருமானம் இல்லை எனவும், அதனால் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பால் வாங்க பணம் இல்லாததால் தான் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லாததால் தனது செல்போனை அடமானமாக வைத்துக் கொண்டு 100 ரூபாய் தாருங்கள் என்று கண்களில் நீர் வழிந்தோட கூறியுள்ளார். தினக்கூலி சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்தினர் பெரிதும் சிரமத்துக்கு உள்ளன. எனவே ஆவின் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஏழை குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக இலவசமாக வழங்க ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம் என கூறப்பட்டுள்ளது.