வ.உ.சி துறைமுகத்திற்கு தடை விலக்கு அளிக்க கோரிக்கை மனு : வஉசி துறைமுக நிர்வாகம்

கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வஉசி துறைமுக நிர்வாகம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது, தற்போது கராேனா  வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவை கூறி உள்ளது. எனவே தாங்கள் தூத்துக்குடியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், டிரக்குகள்,டெம்போக்கள் ஆகியவற்றிற்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் வஉசி துறைமுகம் சார்பில் துறைமுக பகுதிகளில் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.