சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

சென்னை ஐஐடியில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி முதலமாண்டு முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் ஐஐடி விடுதியில் உள்ள தனது அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவி பாத்திமா லத்தீப் வழக்கை தமிழக காவல்துறை விசாரணையில் இருந்து மத்திய குற்ற பிரிவுக்கு தமிழக அரசு மாற்றியது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.