நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஜமீன்நலலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் அ.பழனிச்சாமி நாடார் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜமீன்நலலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.பழனிச்சாமி நாடார் அவர்கள் சுயேச்சையாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பிலும், தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் .வி.ஆர்.விஜய்மாரிஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்தார்கள்.