விவசாய மின்நுகர்வோர்களுக்கு ஓர் அறிவிப்பு

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின் பளு தேவைப்படுவோர் (அனுமதிக்கப்பட்ட மின்பளு + கூடுதல் மின் பளு = மொத்த மின்பளு 15 HP)

“தட்கல் புதிய கூடுதல் மின்பளு பெறும் திட்டம் 2020-2021” என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது அதற்கான விருப்ப கடிதம் மின் நுகர்வோர்/பிரதிநிதி (அல்லது) வாரிசுதாரர் அவர்கள் செயற்பொறியாளர் / விநியோகம் அலுவலகத்தில் வரும் 30.06.2020 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கூடுதல் மின்பளு கோரும் மின்மாற்றியில் போதுமான மின்பளு இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

  1. பதிவு மற்றும் செயல்பாட்டுக்கட்டணம் ரூ.100 + ரூ.18 (GSTவுடன்)
  2. ஒவ்வொரு HP கூடுதல் மின்பளுவிற்கும் ரூ.20,000/- வீதம் செலுத்திட வேண்டும் என்ற தகவல் அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.