தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7 1/4 லட்சம் செலவில் புதிய நவீன கிருமி நாசினி தெளிப்பான் :

தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூபாய் 7 1/4 லட்சம் செலவில் புதிய நவீன கிருமி நாசினி தெளிப்பான் வாங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில பேரிட மேலாண்மை நிதியின் மூலம் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அதிநவீன கிருமிநாசினி தெளிப்பான் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த தெளிப்பான் ஒரு மணி நேரத்திற்கு 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினி திரவத்தை தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

அனைத்து சிறிய மற்றும் குறுகிய தெருக்களிலும் இந்த கிருமி நாசினி மூலம் மருந்து தெளிக்க முடியும். இந்த கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமை தாங்கி கிருமிநாசினி திறக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் தொடர்ந்து மாநகராட்சியில் முக்கிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.