சிபிஎம் சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது .

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 22, 2018 அன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது.

மே 22 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு தூத்துக்குடி சிபிஎம் அலுவலகத்தில் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு அர்ஜுனன் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது ராஜா மாநகர் செயலாளர்
ஆறுமுகம் பேச்சிமுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூமயில் மாதர் சங்க மாவட்ட செயலாளர்
எம் எஸ் முத்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாரியப்பன் ரவிச்சந்திரன் புவிராஜ் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்