வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், மேல திருச்செந்தூர், தளவாய் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்ட ராஜ் (29) என்பவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பியுள்ளார். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரால் சென்னைக்கு திரும்பி செல்ல முடியவில்லை. இதனால் வேலையின்றி, போதிய வருமானமும் இன்றி வறுமையில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.