ஊரே திரண்டு ஒருவர் மீது புகார்!! – ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த கெஞ்சனூர், இக்கரை நெகமம் கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தொடர்ந்து ஊரைச் சுற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்ற வாரம் 14 ம் தேதி எங்க ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை அவரது ஆட்டோவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதோடு ஆட்டோவை கல்லால் தாக்கி சேதப்படுத்திள்ளார். அதனை நியாயம் கேட்க சென்ற போது அந்த நபர் ஊர் மக்களையும் கேவலமாக தரக்குறைவாக பேசியதோடு சுற்றியிருந்த வீடுகளிலும் கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த கெஞ்சனூர், இக்கரை நெகமம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் அந்த நபரால் நாங்கள் துன்பப்படுகிறோம் ரவுடி போல எங்களை மிரட்டுகிறார். இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்கிறோம் எனவே சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.