ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் 50% சலுகை…. ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொண்டால் 100% சலுகை!!!

புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே எழுத்தாளர் ஞானபானுவின் மகன் நிருபன் ஹோட்டல் ஒன்று ஆரம்பித்துள்ளார். ஹோட்டலுக்கு வருபவர்கள் 100 திருக்குறள் மனப்பாடமாக சொன்னால் சிக்கன், மட்டன், காடை, இறால் என நான்வெஜ் விருந்து இலவசமாக வழங்கப்படும் என ஒரு கண்டிஷன் போட்டு உள்ளனர். மேலும் அதே ஹோட்டலுக்கு மாமியார்- மருமகள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் 50% சலுகையும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொண்டால் 100% சலுகையும் கொடுப்பதாக சலுகைகளை அளித்துள்ளனர். ஆனால், இது வரைக்கும் ஒரு மாமியார்- மருமகள் கூட அந்த ஹோட்டலுக்கு வரவில்லை என நிருபன் கூறியுள்ளார். மேலும் அவரிடம் விசாரித்தபோது தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் தான் இந்த ஹோட்டலை ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.