தூத்துக்குடியில் ஏழை எளிய மக்களுக்கு Whatsapp மூலம் தேடி போய் உணவளிக்கும் நமது நண்பர்கள் குழு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணிக்கு உட்பட்ட இராஜபாளையம் ஊாிலிருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் காலணி வீடுகள் உள்ளன. இக்காலணியில் 100 பேருக்கு மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவால் இவர்களுக்கு வெளியே செல்ல முடியதால் ஒரு வேளை சாப்பாடுக்கு கூட வழி இல்லை மேலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்குவதற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் நிலையை ராஜபாளையம் ஊரைச் சேர்ந்த சமூக அர்வலர் தொம்மை அந்தோணி அவர்கள் மூலம் அறிந்த மொினா பிரபு, பால்ராஜ் அவர்கள் இன்று(11/04/2020) தங்கள் நண்பர்களுடன் காாில் அவர்களுக்கு தேவையான மதிய உணவை தாளமுத்துநகர் காவல் துறை ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின் அவர்கள் மூலம் காலனி மக்களுக்கு வழங்கினார்கள்.

முழு வீடியோ பார்க்க: https://youtu.be/ieY4BLBq9EY

மேலும் மெரினா பிரபு நமது Timestamp News செய்தியாளர்களிடம் கூறும் போது தாங்கள் அறிந்த வகையில் அரசு அறிவித்த ஊரடங்கு உத்திரவினால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் ஆதரவற்ற வயதான அல்லது இளம்சிறார்கள், உடல் ஊனமுற்றவர்கள், கையில் பணமில்லாத காரணத்தினால் உணவில்லாமல் தவிப்பவர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் இருந்தால் அவர்களுக்கு எங்கள் வீடுகளில் தயார் செய்த மதிய உணவை வழங்கி வந்து கொண்டு இருக்கிறோம்.

கடந்த 09 நாட்களுக்கு முன் 65 உணவுடன் ஆரம்பித்தது இன்று 10.04.2020 அதிகபட்சமாக 437 பேர்கள் வரை மதிய உணவுகள் பாதுகாப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நற்காரியத்திற்காக தங்கள் வீட்டு உணவை பகிர்த்து வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் சேகரிக்கப்பட்ட உணவுகளை தூத்துக்குடி மேற்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறோம். இன்றைய இக்கட்டான சூழலில் உண்மையில் உதவி தேவைப்படும் என்றால் தாங்கள் அறிந்தவர்களின் பெயர், விலாசம் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் ஆகியவற்றை 9487838297 – மொினா பிரபு 9443158129, 9600924659- பால்ராஜ். என்ற எண்ணில் Whats app ல் தெரிவிக்குமாறு தயவாய் வேண்டி கேட்டு கொள்கிறோம்.