தானியங்கி கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம் தயாரித்து அரசுப்பள்ளி மாணவன் அசத்தல்

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் போட்டியில் திருவள்ளூர் டி ஆர் பி சி சி மேல்நிலைப்பள்ளியில் 62 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பெரியபாளையம் எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் பிருத்திவிராஜ் கலந்துகொண்டு கழிவறையை சுத்தம் செய்யும் கருவியை காட்சிப்படுத்தி முதல் பரிசை பெற்றார். இந்திய மற்றும் அயல்நாட்டு கழிவறைகளை எளிய முறையில் சுத்தம் செய்யும் கருவியை முதியோர் மாற்றுத்திறனாளிகள் கூட எளிதில் பயன்படுத்தும் விதமாக இக்கருவியை கண்டறிந்து அனைவரது பாராட்டையும் பெற்ற மாணவன், மாவட்ட அளவில் முதல் பரிசையும் பெற்றார்.