தமிழகத்தில் ஆபாச படங்களை பகிர்ந்தவர் முதல்முறையாக கைது

சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கைது நடவடிக்கைக்கு பயப்படத்தேவையில்லை என ஏடிஜிபி ரவி தெரிவித்த நிலையில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான படங்களை பார்த்ததோடு அந்த ஆபாச படங்களை ஃபேஸ்புக் மெசேஞ்சரில் 15க்கும் அதிகமானோருக்கு பகிர்ந்துள்ளதால் கைது செய்த பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே ஆபாச படங்களை பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆபாச படங்களை பகிர்ந்தவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.