சிறப்பாக நடைபெற்றதுமாண்புமிகு தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – தூத்துக்குடி

மாவட்ட அளவிலான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌.

இந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்றும், இன்றும் (15.02.2020 & 16.02.2020) ஆகிய இருநாட்கள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் (தருவை மைதானம்) நடைபெற்றது.

இந்த 2020 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், கபாடி, குத்துச்சண்டை, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ் மற்றும் ஜூடோ ஆகிய 10 விளையாட்டுக்கள் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது.

மேற்படி அனைத்து விளையாட்டு போட்டிகளும் இன்றுடன் (16.02.2020) நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் திரு. ஜெயரத்தினராஜ் வரவேற்புரையும், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. பேட்ரிக் போட்டிகளுக்கான விளக்கவுரையும், உடற்கல்வி ஆய்வாளர் திரு. பால்சாமி, நீச்சல் கழக தலைவர் திரு. வேல்சங்கர் வாழ்த்துரையும் மற்றும் திரு. புஷ்பராஜ் பால் ஆசீர் நன்றியுரையும் ஆற்றி விழா நிறைவு பெற்றது.

இவ்விழாவில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.