தனியார் மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கு ஒருமணிநேரமாக சிகிச்சை – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சாமுவேல், திவ்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குழந்தை எல்லோரா சளித்தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் செல்வ விநாயகபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்க குழந்தைக்கு மருத்துவர்கள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் இதுமட்டுமின்றி குழந்தை உயிரிழந்ததை தெரிவிக்காமல் கிசிச்சை அளிப்பதுபோல் ஒருமணிநேரமாக மருத்துவமனை நிர்வாகம் நாடகம் ஆடியதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். மேலும் சாமுவேல் தந்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.