பாலியல் சீண்டலால் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற 16 வயது சிறுமி!!!

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குடபட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவர்களது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்ற பின் தனியாக இருக்கும் அந்தச் சிறுமியிடம் அதேப் பகுதியைச் சேர்ந்த சரவணன் அடிக்கடி பாலியல் சீண்டல் கொள்வது வழக்கமாம். இது குறித்து யாரெனுக்கும் தெரிய வந்தால் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் அவமானம் என்று கருதிய அந்தச் சிறுமி சரவணனின் பாலியல் சேஷ்டையை வெளியில் சொல்லாமல் தனக்குத் தானே சமாதானப்படுத்திப் போராடி வந்திருக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் சரவணன் மற்றும அவனது நண்பர்களான வேல்சாமி மற்றும் குகன் ஆகியோருடன் சேர்ந்து மது போதையில் கேலி செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலுக்கு முன் வர, அவர்களை எதிர்த்துள்ளார் அந்தச் சிறுமி. 
 

அவர்கள் மூன்று பேரும் சிறுமியிடம், “ஒழுங்காக உடன்படு.! இல்லையெனில் உன்னுடைய குடும்பத்தையே கொளுத்திடுவோம்” என மிரட்டி உள்ளனர். இது தொடர்ந்தால் தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் இழுக்கு என்று நினைத்த அந்தச் சிறுமி தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துத் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தீப்பற்றியதால் கடும் அலறல் சப்தத்துடன் போராட, அந்தச் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் அந்தச் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சிறுமிக்கு அவர்கள் மூவரும் பாலியல் சீண்டல்களைத் தினசரி கொடுத்துள்ளது தெரிய வந்தது. குற்றவாளிகள் மூவரும் லாரி ஏறி தப்பித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். தலைமறைவானவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தரவேண்டும்.” என்கிறார் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சிறுமியின் தாயார் பத்ரகாளி. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.